Bible Language

Exodus 29:5 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அந்த வஸ்திரங்களை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் தரித்து, ஏபோத்தின் விசித்திரமான கச்சையையும் அவனுக்குக் கட்டி,
IRVTA   அந்த ஆடைகளை எடுத்து, ஆரோனுக்கு உள்சட்டையையும், ஏபோத்தின் கீழ் அங்கியையும், ஏபோத்தையும், மார்ப்பதக்கத்தையும் அணிந்து, ஏபோத்தின் விசித்திரமான இடுப்புக்கச்சையும் அவனுக்குக் கட்டி,
ERVTA   முழுவதும் நெய்த வெள்ளை அங்கியையும், ஏபோத்தோடு அணிய வேண்டிய நீல அங்கியையும் உடுத்திவிடு. அதன் மேல் ஏபோத்தையும், நியாயத்தீர்ப்பு மார்ப்பதக்கத்தையும் அணியச்செய். அழகிய அரைக்கச்சையை கட்டிவிடு.
RCTA   பின் ஆரோனையும் ஆடை அணிகளை எடுத்து வந்து, மெல்லிய சணல் நூலால் நெய்த உட்சட்டையையும் கீழங்கியையும் எப்போத்தையும் மார்ப்பதக்கத்தையும் அவனுக்கு அணிவித்து மேலே விசித்திரக் கச்சையால் அவற்றைக் கட்டுவாய்.
ECTA   உடைகளை எடுத்து வந்து கோடிட்ட உள்ளாடை, ஏப்போதின் அங்கி, ஏப்போது, மார்புப்பட்டை இவற்றை ஆரோனுக்கு அணிவித்து ஏப்போதின் கைவண்ணமிக்க கச்சையால் கட்டுவாய்.