Bible Language

Ezekiel 16:19 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நான் உனக்குக் கொடுத்த என் அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன் சுகந்தவாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆயிற்றென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
IRVTA   நான் உனக்குக் கொடுத்த என்னுடைய அப்பத்தையும், நீ சாப்பிடும்படி உனக்குக் கொடுத்த மெல்லிய மாவையும் நெய்யையும் தேனையும் நீ அவைகளின்முன்பு சுகந்த வாசனையாகப் படைத்தாய்; காரியம் இப்படி ஆனதென்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்.
ERVTA   நான் உனக்கு அப்பம், தேன், எண்ணெய் ஆகியவற்றைக் கொடுத்தேன். ஆனால் நீ அவற்றை அந்த விக்கிரகங்களுக்கு கொடுத்தாய். உனது பொய்த் தெய்வங்களை மகிழ்ச்சிப்படுத்த நீ இனிய மணப்பொருட்களை வழங்கினாய்! அப்பொய்த் தெய்வங்களிடம் நீ ஒரு வேசியைப்போன்று நடந்துகொண்டாய்!" எனது கர்த்தராகிய ஆண்டவர் இவற்றைச் சொன்னார்.
RCTA   நாம் உன் சாப்பாட்டுக்கெனக் கொடுத்த அப்பம், மாவு, எண்ணெய், தேன் இவற்றை நீ அவற்றின் முன் உயர்ந்த நறுமணம் வீசும்படி வைத்துப் படைத்தாய், என்கிறார் ஆண்டவராகிய இறைவன்.
ECTA   நான் உனக்கு அளித்த மாவு, எண்ணெய், தேன் ஆகிய அதே உணவுப் பொருள்களை, நீ அவற்றின்முன் நறுமணப் பலியெனப் படைத்தாய் என்கிறார் தலைவராகிய ஆண்டவர்.