Bible Language

Ezekiel 20:40 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என் பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்பண்ணுகிற எல்லாவற்றிலும் உங்கள் காணிக்கைகளையும் உங்கள் முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன்.
IRVTA   இஸ்ரவேலின் உயரமான மலையாகிய என்னுடைய பரிசுத்த மலையிலே இஸ்ரவேலுடைய எல்லா வம்சத்தாருமாகிய தேசத்திலுள்ள அனைவரும் என்னைச் சேவிப்பார்கள் என்று யெகோவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; அங்கே அவர்கள்மேல் பிரியம் வைப்பேன்; அங்கே நீங்கள் பரிசுத்தம்செய்கிற எல்லாவற்றிலும் உங்களுடைய காணிக்கைகளையும் உங்களுடைய முதற்பலன்களையும் செலுத்தும்படி கேட்பேன்.
ERVTA   எனது கர்த்தராகிய ஆண்டவர் கூறுகிறார்: ‘ஜனங்கள் எனது பரிசுத்தமான மலைகளுக்கு இஸ்ரவேலிலுள்ள உயரமான மலையில் எனக்குச் சேவை செய்ய வரவேண்டும்! இஸ்ரவேலின் எல்லா வம்சத்தாருமாகிய அனைவரும் உங்கள் நிலத்தில் (தேசத்தில்) இருப்பீர்கள். என்னிடம் வந்து ஆலோசனை கேட்கக்கூடிய இடம் அதுதான். நீங்கள் அந்த இடத்திற்கு உங்கள் காணிக்கைகளை எடுத்துக்கொண்டு வரவேண்டும். உங்கள் விளைச்சலின் முதல் பகுதியை அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும். உங்கள் பரிசுத்த அன்பளிப்புகள் அனைத்தையும் அந்த இடத்திற்கு நீங்கள் கொண்டு வரவேண்டும்.
RCTA   ஆண்டராகிய இறைவன் கூறுகிறார்: நமது பரிசுத்த மலையில்- இஸ்ராயேல் நாட்டின் உயர்ந்த மலையாகிய நமது மலையில்- இஸ்ராயேல் வீட்டாரனை வரும் நம்மைச் சேவிப்பார்கள்; ஆம், அங்கே உங்கள் மேல் நாம் விருப்பம் கொள்வோம்; அங்கே உங்கள் காணிக்கைகளையும், கொடைகளில் சிறந்தவற்றையும், உங்கள் பரிசுத்த பலிகளையும் ஏற்றுக் கொள்வோம்.
ECTA   என் திருமலையில், இஸ்ரயேல் நாட்டு மலைமுகட்டில் வாழும் இஸ்ரயேல் வீட்டார் அனைவரும் அந்நாட்டில் என்னை வழிபடுவர், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். அங்கே நான் அவர்களை ஏற்றுக் கொள்வேன். அங்கே உங்கள் புனிதப்பலிகள் அனைத்தோடும் படையல்களையும் முதற்பலன் காணிக்கைகளையும் நான் எதிர்பார்த்து நிற்பேன்.