Bible Language

Genesis 27 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஈசாக்கு முதிர்வயதானதினால் அவன் கண்கள் இருளடைந்து பார்வையற்றுப்போனபோது, அவன் தன் மூத்த குமாரனாகிய ஏசாவை அழைத்து, என் மகனே என்றான்; அவன், இதோ, இருக்கிறேன் என்றான்.
IRVTA   {ஈசாக்கிடமிருந்து யாக்கோபு ஆசீர்வாதத்தைப் பெறுதல்} PS ஈசாக்கு முதிர்வயதானதால் அவனுடைய கண்கள் பார்வையிழந்தபோது, அவன் தன் மூத்த மகனாகிய ஏசாவை அழைத்து, “என் மகனே” என்றான்; அவன், “இதோ இருக்கிறேன்” என்றான்.
ERVTA   ஈசாக்கு வயோதிபன் ஆனான். அவனது கண்கள் பலவீனமாகி அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை. ஒரு நாள் தன் மூத்த மகன் ஏசாவை அழைத்து "மகனே" என்றான். ஏசா "இங்கே இருக்கிறேன்" என்றான்.
RCTA   ஈசாக் முதியவனானதனால் அவன் கண்கள் கெட்டுப் பார்வை அற்றுப் போயின. ஒரு நாள் அவன் தன் மூத்த மகன் எசாயூவைக் கூப்பிட்டு, என் மகனே, என்று அழைக்க எசாயூ: இதோ வருகிறேன், என்று பதில் கூறினான்.
ECTA   ஈசாக்கு முதிர்ந்த வயதை அடைந்தபோது அவர் கண்களின் பார்வை மங்கிப்போயிற்று. அவர் தம் மூத்த மகன் ஏசாவை அழைத்து, "என் மகனே" என்றார்; ஏசா, "இதோ வந்துவிட்டேன்" என்றான்.