Bible Language

Genesis 40 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இந்த நடபடிகளுக்குப்பின்பு, எகிப்து ராஜாவுக்குப் பானபாத்திரக்காரனும் சுயம்பாகியும் எகிப்து ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்குக் குற்றம் செய்தார்கள்.
IRVTA   {ராஜாவின் பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும்} PS இந்த சம்பவங்களுக்குப்பின்பு, எகிப்தின் ராஜாவுக்கு பானபாத்திரக்காரனும் அப்பம் சுடுகிறவனும் எகிப்தின் ராஜாவாகிய தங்கள் ஆண்டவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்தார்கள்.
ERVTA   பிறகு, பார்வோனுக்கு எதிராக ரொட்டி சுடுபவனும், திராட்சைரசம் கொடுப்பவனுமான இரண்டு வேலைக்காரர்கள் தவறு செய்தனர்.
RCTA   இவை நிகழ்ந்த பின், எகிப்து மன்னனுக்குப் பானம் அமைப்போர் தலைவனும் அப்பம் படைப்போர் தலைவனும் ஆகிய அண்ணகர் இருவர் தங்கள் மன்னனுக்கு எதிராகக் குற்றஞ் செய்தனர்.
ECTA   இவை நிகழ்ந்தபின், எகிப்து மன்னனுக்கு மது பரிமாறுவோனும், அப்பம் தயாரிப்போனும் தங்கள் தலைவனாகிய எகிப்திய மன்னனுக்கு எதிராகக் குற்றம் செய்தனர்.