Bible Language

Genesis 50:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆத்தாத்தின் களத்திலே துக்கங்கொண்டாடுகிறதை அத்தேசத்தின் குடிகளாகிய கானானியர் கண்டு: இது எகிப்தியருக்குப் பெரிய துக்கங்கொண்டாடல் என்றார்கள். அதினால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த ஸ்தலத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்னும் பேர் உண்டாயிற்று.
IRVTA   ஆத்தாத்தின் களத்திலே துக்கம் அனுசரிக்கிறதை அந்த தேசத்தின் குடிமக்களாகிய கானானியர்கள் கண்டு: “இது எகிப்தியருக்குப் பெரிய துக்கம் அனுசரித்தல்” என்றார்கள். அதனால் யோர்தானுக்கு அப்பால் இருக்கிற அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் * எகிப்தியர்களின் புலம்பல் என்னும் பெயர் உண்டானது.
ERVTA   கானான் நாட்டிலுள்ள ஜனங்களெல்லாம் இந்தச் சடங்கில் கலந்துகொண்டனர். அவர்களோ, "அந்த எகிப்தியர்கள் பெரிய துக்கமான சடங்கைக் கொண்டுள்ளனர்" என்றனர். இப்போது அந்த இடத்திற்கு ஆபேல்மிஸ்ராயீம் என்று பெயர் வழங்குகிறது.
RCTA   கானான் நாட்டுக் குடிகள் அதைக் கண்டு: இது எகிப்தியர்களுக்குப் பெரிய துக்கமே என்றார்கள். அதனால் அவ்விடத்திற்கு எகிப்தியர் அழுகை என்ற பெயர் உண்டாயிற்று.
ECTA   அங்கே, கானான் நாட்டில் வாழ்ந்த மக்கள் கோரேன் அத்தத்தில் நடந்த புலம்பல் சடங்கைக் கண்டு, "இது எகிப்தியரது பெருந்துயர்ப் புலம்பல் சடங்கு" என்றனர். ஆகவேதான் யோர்தானுக்கு அப்பால் இருந்த அந்த இடத்திற்கு "ஆபேல் மிஸ்ராயிம்" என்ற பெயர் வழங்கலாயிற்று.