Bible Language

Isaiah 27:10 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அரணான நகரம் அவாந்தரையாகும், அந்த வாசஸ்தலம் தள்ளுண்டு வனாந்தரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
IRVTA   பாதுகாப்பான நகரம் வெட்டாந்தரையாகும், அந்த குடியிருப்பு தள்ளுண்டு வனாந்திரத்தைப்போல விட்டுவிடப்பட்டதாயிருக்கும்; கன்றுக்குட்டிகள் அங்கே மேய்ந்து, அங்கே படுத்துக்கொண்டு, அதின் தழைகளைத் தின்னும்.
ERVTA   அந்தக் காலத்திலே, பெரு நகரம் காலியாகும். அது வனாந்தரம்போல் ஆகும். எல்லா ஜனங்களும் செல்வார்கள். அவர்கள் வெளியே ஓடுவார்கள். அந்த நகரமானது திறந்த மேய்ச்சல் நிலம்போல் ஆகும். இளம் கன்றுக்குட்டிகள் அங்கே புல் மேயும். திராட்சைக் கொடிகளிலுள்ள இலைகளைக் கன்றுக்குட்டிகள் உண்ணும்.
RCTA   அரண் சூழ்ந்த நகரம் பாழாகிக் கிடக்கும், அழகிய அந்நகரம் கைவிடப்படும், பாலை நிலத்தைப் போலப் புறக்கணிக்கப்படும்; ஆங்கே கன்று வந்து மேயும், படுத்துறங்கும், அதில் தழைத்துள்ளவற்றைத் தின்னும்.
ECTA   அரண் சூழ்ந்த நகரம் தனித்து விடப்பட்டுள்ளது; குடியிருப்பாரின்றிப் பாழாய்க் கிடக்கிறது. பாலைநிலம் போல் புறக்கணிக்கப்பட்டுள்ளது; ஆங்கே, கன்றுக்குட்டி மேய்கின்றது, படுத்துக்கிடக்கின்றது; அதில் தழைத்துள்ளவற்றைத் தின்று தீர்க்கின்றது.