Bible Language

Isaiah 28:4 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய புஷ்பம், பருவகாலத்துக்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
IRVTA   செழிப்பான பள்ளத்தாக்குடைய கொடுமுடியின்மேலுள்ள அலங்கார ஜோடிப்பாகிய வாடிய பூ, பருவகாலத்திற்குமுன் பழுத்ததும், காண்கிறவன் பார்த்து, அது தன் கையில் இருக்கும்போதே விழுங்குகிறதுமான முதல் கனியைப்போல இருக்கும்.
ERVTA   மலைக்குமேல் வளமான பள்ளத்தாக்கு சுற்றிலும் இருக்க இந்நகரம் உள்ளது. அந்த "அழகான பூக்களாலான மகுடம்" வாடும் செடியைப் போன்றுள்ளது. அந்த நகரம் கோடையில் முதலில் பழுத்த அத்திப்பழம் போன்றது. ஒருவன் அப்பழத்தில் ஒன்றைப் பார்க்கும்போது, அவன் உடனே அதனை எடுத்துச் சாப்பிட்டுவிடுகிறான்.
RCTA   செழிப்பான பள்ளத்தாக்கில் அமைந்திருக்கின்ற அதன் மகிமை மிக்க அழகாகிய வாடிப்போகும் மலர், கோடைக்காலம் வருமுன் பருவந் தப்பிப்பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் கண்டவன் கையால் பறித்து அப்பொழுதே உண்டு விடுவான்.
ECTA   வாடுகின்ற மலராய் அதன் மேன்மை மிகு எழில் குலைகின்றது; நறுமணம் பூசிய தலைவர்கள் வீழ்ந்து கிடக்கின்றனர்; இது கோடைக்காலம் வரும் முன் பழுத்த அத்திப்பழம் போலாகும்; அதைக் காண்பவன் தன் கைக்கு எட்டியதும் அதை விழுங்கி விடுவான்.