Bible Language

Isaiah 54:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவற்றவளே, இதோ, நான் உன் கல்லுகளைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
IRVTA   சிறுமைப்பட்டவளே, பெருங்காற்றில் அடிபட்டவளே, தேற்றரவு இல்லாதவளே, இதோ, நான் உன் கற்களைப் பிரகாசிக்கும்படி வைத்து, நீலரத்தினங்களை உன் அஸ்திபாரமாக்கி,
ERVTA   "ஏழை நகரமே! பகைவர்கள் புயலைப் போன்று உனக்கு எதிரே வந்தார்கள். எவரும் உனக்கு ஆறுதல் அளிக்கவில்லை. ஆனால், நான் உன்னை மீண்டும் கட்டுவேன். நான் ஒரு அழகான கல்லை உனது சுவர்களுக்கு வைப்பேன். நான் நீல ரத்தினக் கற்களைப் பயன்படுத்தி அஸ்திபாரம் அமைப்பேன்.
RCTA   புயலால் அலைக்கழிக்கப்பட்டு ஆறுதலின்றித் தவிக்கும், ஏழைப் பெண்ணான யெருசலேமே, இதோ நாமே உன் கற்களை மாணிக்கங்கள் மேல் அடுக்குவோம்; உனக்கு நீலக் கற்களால் அடிப்படை இடுவோம்.
ECTA   துயருற்றவளே, சூறைக்காற்றால் அலைக்கழிக்கப்பட்டவளே, ஆறுதல் பெறாது தவிப்பவளே, இதோ, மாணிக்கக்கற்களால் உன் அடித்தளத்தை அமைப்பேன், நீலக்கற்களால் உன் நிலைக்களத்தை நிறுவுவேன்.