Bible Language

Isaiah 63:17 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   கர்த்தாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகப்பண்ணி, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்குக் கடினப்படுத்துவானேன்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உம்முடைய சுதந்தரமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
IRVTA   யெகோவாவே, நீர் எங்களை உம்முடைய வழிகளைவிட்டுத் தப்பிப்போகச்செய்து, எங்கள் இருதயத்தை உமக்குப் பயப்படாதபடிக்கு ஏன் கடினப்படுத்தவேண்டும்? உம்முடைய ஊழியக்காரரினிமித்தமும், உமக்குச் சொந்தமான கோத்திரங்களினிமித்தமும் திரும்பியருளும்.
ERVTA   கர்த்தாவே, எங்களை நீர் ஏன் உம்மிடமிருந்து தள்ளுகிறீர். உம்மைப் பின்தொடர்வதை நீர் ஏன் கடினமாக்கினீர்? கர்த்தாவே எங்களிடம் திரும்பி வாரும். நாங்கள் உமது ஊழியர்கள். எங்களிடம் வந்து எங்களைக் காப்பாற்றும். எங்கள் குடும்பங்களும் உம்மைச் சார்ந்தது.
RCTA   ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து நாங்கள் பிறழும்படி விட்டதேன்? உமக்கு அஞ்சாதபடி எங்கள் உள்ளத்தைக் கடினமாக்கியதேன்? உம்முடைய ஊழியர்களை முன்னிட்டும் உம் உரிமைச் சொத்தாகிய கோத்திரங்களை முன்னிட்டும் எங்கள் பக்கமாய்த் திரும்பியருளும்.
ECTA   ஆண்டவரே, உம் வழிகளிலிருந்து எங்களைப் பிறழச் செய்வதேன்? உமக்கு அஞ்சி நடவாதவாறு எம் நெஞ்சங்களைக் கடினப்படுத்தியதேன்? உம் ஊழியர்களை முன்னிட்டும், உம் உரிமைச் சொத்தாகிய, குலங்களை முன்னிட்டும் திரும்பிவாரும்.