Bible Language

Jeremiah 36:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா நிச்சயமாய் வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனுஷரையும் மிருகங்களையும் ஒழியப்பண்ணுவான் என்பதையும் நீ அதில் எழுதினதேதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
IRVTA   மேலும் நீ யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீமை நோக்கி: பாபிலோன் ராஜா கண்டிப்பாக வருவான் என்பதையும், அவன் இந்த தேசத்தை அழித்து இதிலிருந்து மனிதரையும் மிருகங்களையும் அழிப்பான் என்பதையும், நீ அதில் எழுதியிருக்கிறதென்று சொல்லி, அந்தச் சுருளை நீ சுட்டெரித்தாயே என்று யெகோவா சொல்லுகிறார்.
ERVTA   எரேமியா, யூதா அரசன் யோயாக்கீமிடம் இவற்றையும் சொல், ‘கர்த்தர் சொல்கிறது இதுதான்: யோயாக்கீம், அப்புத்தகச் சுருளை எரித்தாய். நீ, "பாபிலோன் அரசன் உறுதியாக வந்து இந்நாட்டை அழிப்பான் என்று எரேமியா ஏன் எழுதினான்? பாபிலோன் அரசன் இத்தேசத்திலுள்ள மனிதர்களையும் மிருகங்களையும் அழிப்பான் என்று ஏன் அவன் சொல்கிறான்?" என்று சொன்னாய்.
RCTA   பிறகு நீ யூதாவின் அரசனாகிய யோவாக்கீமை நோக்கி: 'ஆண்டவர் கூறுகிறார்: "பபிலோனிய மன்னன் விரைவில் வந்து இந்நாட்டை அழித்து, அதிலுள்ள மனிதனையும் மிருகத்தையும் வெட்டி வீழ்த்துவான் என்று ஏன் அதில் எழுதினாய்?" என்று எரெமியாசுக்குச் சொல்லியன்றோ நீ அந்த ஓலைச் சுருளைக் கொளுத்தி விட்டாய்;
ECTA   பின்னர் யூதா அசரனான யோயாக்கிமைக் குறித்து நீ சொல்லவேண்டியது; ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்; "பாபிலோனிய மன்னன் திண்ணமாய் வந்து, இந்நாட்டை அழித்துவிடுவான்; மனிதரையும் விலங்குகளையும் வெட்டி வீழ்த்துவான் என்று நீ ஏன் எழுதினாய்?" என்று கூறி அன்றோ நீ அந்த ஏட்டுச் சுருளை எரித்தாய்.