Bible Language

Jeremiah 46:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து நாணேற்றுகிற லீதியரும் புறப்படக்கடவர்கள்.
IRVTA   குதிரைகளே, போய் ஏறுங்கள்; இரதங்களே, கடகட என்று ஓடுங்கள்; பராக்கிரமசாலிகளும், கேடகம் பிடிக்கிற எத்தியோப்பியரும், பூத்தியரும், வில்லைப்பிடித்து அம்பேற்றுகிற லூதீயரும் புறப்படுவார்களாக.
ERVTA   குதிரை வீரர்களே, போருக்குப் போய் ஏறுங்கள். தேரோட்டிகளே, வேகமாக ஓட்டுங்கள். தைரியமான வீரர்களே புறப்படுங்கள். கஷ் மற்றும் பூத்திலிருந்து வந்த வீரர்களே! உங்கள் கேடயங்களை எடுத்துக்கொள்ளுங்கள். லீதிய வீரர்களே! உங்கள் வில்லைப் பயன்படுத்துங்கள்.
RCTA   குதிரைகளே, முன்னேறித் தாக்குங்கள், தேர்ப்படைகளே, கொதித்தெழுங்கள்! போர் வீரர்கள் முன்னேறித் தாக்கட்டும்; எத்தியோப்பியரும் லிபியரும் கேடயம் பிடித்துப் போங்கள்; லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றுங்கள்.
ECTA   குதிரைகளே, பாய்ந்து செல்லுங்கள்; தேர்களே, விரைந்து ஓடுங்கள்; படைவீரர்களே, முன்னேறிச் செல்லுங்கள். எத்தியோப்பியரும் லீபியரும் கேடயம் ஏந்தட்டும்! லீதியர் அம்புகளைத் தொடுத்து நாணேற்றட்டும்!