Bible Language

Jeremiah 50:29 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் பாளயமிறங்குங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் கிரியைக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய கர்த்தருக்கு விரோதமாக இடும்பு செய்தது.
IRVTA   பாபிலோனுக்கு விரோதமாய் வரும்படி வில்வீரரை அழையுங்கள்; வில் வளைக்கிறவர்களே, நீங்கள் எல்லோரும் அதற்கு விரோதமாய்ச் சுற்றிலும் முகாமிடுங்கள்; ஒருவரையும் தப்பவிடாதிருங்கள்; அதின் செயலுக்குத்தக்கபலனை அதற்குச் சரிக்கட்டுங்கள்; அது செய்ததின்படியெல்லாம் அதற்குச் செய்யுங்கள்; அது இஸ்ரவேலின் பரிசுத்தராகிய யெகோவாவுக்கு விரோதமாக இடும்பு செய்தது.
ERVTA   அம்புகளை எய்யும் ஆட்களைக் கூப்பிடு. பாபிலோனைத் தாக்கும்படி அவர்களிடம் சொல். நகரத்தை முற்றுகையிடும்படி அவர்களிடம் சொல். எவரையும் தப்பிக்கவிடாதே. அவள் செய்த தீமைக்கு, திருப்பிக்கொடுங்கள். அவள் மற்ற தேசங்களுக்கு எவற்றைச் செய்தாளோ அவற்றை அவளுக்குச் செய்யுங்கள். பாபிலோன் கர்த்தருக்கு மரியாதை செய்யவில்லை. பாபிலோன் இஸ்ரவேலின் பரிசுத்தமானவரிடம் மிகவும் மோசமாக நடந்துக்கொண்டது. எனவே பாபிலோனைத் தண்டித்துவிடு.
RCTA   பபிலோனின் அகந்தை: "பபிலோனுக்கு எதிராய் வர வேண்டுமென்று வில் வீரர் அனைவரையும் அழையுங்கள்; அதனைச் சுற்றிலும் வளைத்துக் கொள்ளுங்கள், எவனும் தப்பியோட விடாதீர்கள்; அதன் செயலுக்கேற்றவாறு செய்யுங்கள், அது செய்த யாவற்றின்படியும் நீங்கள் செய்யுங்கள்; ஏனெனில் ஆண்டவருக்கு எதிராக எழும்பி நின்றது, இஸ்ராயேலின் பரிசுத்தரை அவமதித்தது.
ECTA   வில்லாளர்கள், வில்வீரர்கள் அனைவரும் பாபிலோனுக்கு எதிராக வருமாறு அழையுங்கள்; அதை சுற்றி வளைத்துக் கொள்ளுங்கள். ஒருவனும் தப்பியோட விடாதீர்கள்; அதன் செயல்களுக்குத் தக்கவாறு கைம்மாறு செய்யுங்கள்; அது நடந்து கொண்டதற்கு ஏற்ப அதை நடத்துங்கள்; ஏனெனில், இஸ்ரயேலின் தூயவராகிய ஆண்டவருக்கு எதிராக அது இறுமாப்புடன் நடந்து கொண்டது.