Bible Language

Judges 11:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களுடனேகூட வந்து, அம்மோன் புத்திரரோடு யுத்தம்பண்ணி, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாயிருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடத்தில் வந்தோம் என்றார்கள்.
IRVTA   அதற்குக் கீலேயாத்தின் மூப்பர் யெப்தாவை நோக்கி: நீ எங்களோடு வந்து, அம்மோன் மக்களோடு யுத்தம்செய்து, கீலேயாத்தின் குடிகளாகிய எங்கள் அனைவர்மேலும் தலைவனாக இருக்க வேண்டும்; இதற்காக இப்பொழுது உன்னிடம் வந்தோம் என்றார்கள்.
ERVTA   கீலேயாத்தின் தலைவர்கள் யெப்தாவிடம், "அதனாலேயே நாங்கள் உன்னிடம் வந்துள்ளோம். எங்களோடு வந்து அம்மோனிய ஜனங்களை எதிர்த்துப் போராடு. கீலேயாத்தில் வாழும் ஜனங்கள் எல்லோருக்கும் நீ அதிபதியாவாய்" என்றனர்.
RCTA   காலாத் நாட்டுப் பெருமக்கள் ஜெப்தேயை நோக்கி, "நீ எம்மோடு புறப்பட்டு அம்மோன் புதல்வரை எதிர்த்து, காலாத்திலிருக்கும் அனைவருக்கும் தலைவனாய் இருக்கவேண்டும் என்பதற்காக உன்னைத் தேடி வந்தோம்" என்றனர்.
ECTA   கிலாயதின் பெரியோர்கள் இப்தாவிடம், அதனால்தான் நாங்கள் உம்மை அழைத்துச் செல்ல வந்துள்ளோம். எங்களுடன் வந்து அம்மோனியருடன் போரிடும். நீர் எங்களுக்கும் கிலாயதில் வாழும் அனைவருக்கும் தலைவராக இருப்பீர் என்றனர்.