Bible Language

Judges 20:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரர் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் புத்திரர் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் புத்திரர் கேட்டார்கள்.
IRVTA   இஸ்ரவேல் மக்கள் மிஸ்பாவுக்கு வந்த செய்தியைப் பென்யமீன் மக்கள் கேள்விப்பட்டார்கள்; அந்த அக்கிரமம் நடந்தது எப்படி, சொல்லுங்கள் என்று இஸ்ரவேல் மக்கள் கேட்டார்கள்.
ERVTA   பென்யமீன் கோத்திரத்தின் ஜனங்கள் இஸ்ரவேலர் மிஸ்பாவில் ஒன்று கூடியிருப்பதை அறிந்தனர். இஸ்ரவேலர், "இந்த கொடிய காரியம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதைக் கூறு" என்றனர்.
RCTA   இஸ்ராயேல் மக்கள் மாஸ்பாவிற்கு வந்திருப்பது பெஞ்சமின் மக்களுக்கு எட்டியது, கொல்லப்பட்டவளின் கணவனான லேவியனிடம், "அப்பெரிய கொடுமை எவ்வாறு நடந்தது?" என்று கேட்டனர்.
ECTA   இஸ்ரயேல் மக்கள் மிஸ்பாவுக்குச் சென்றனர் என்பதை பென்யமின் மக்கள் கேள்வியுற்றனர். இஸ்ரயேல் மக்கள், இந்தக் கொடிய நிகழ்ச்சி எவ்வாறு நடந்தது என்பதைக் கூறுங்கள் என்று கேட்டனர்.