Bible Language

Leviticus 6:9 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நீ ஆரோனுக்கும் அவன் குமாரருக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய பிரமாணம் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இராமுழுவதும் விடியற்காலமட்டும் பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள அக்கினி எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
IRVTA   “நீ ஆரோனுக்கும் அவனுடைய மகன்களுக்கும் கற்பிக்கவேண்டிய சர்வாங்க தகனபலிக்குரிய விதிமுறைகள் என்னவென்றால், சர்வாங்க தகனபலியானது இரவுமுதல் விடியற்காலம்வரை பலிபீடத்தின்மேல் எரியவேண்டும்; பலிபீடத்தின் மேலுள்ள நெருப்பு எரிந்துகொண்டே இருக்கவேண்டும்.
ERVTA   "இந்தக் கட்டளையை ஆரோனுக்கும் அவனது பிள்ளைகளுக்கும் சொல். இதுவே தகன பலியைப் பற்றிய சட்டங்கள். தகனபலி இரவு முழுவதும் விடியும்வரை பலிபீடத்தின் மேல் இருக்க வேண்டும். காணிக்கைக்குத் தேவையான நெருப்பானது பலிபீடத்தின் மேல் எரிந்துக் கொண்டிருக்க வேண்டும்.
RCTA   நீ ஆரோனுக்கும் அவன் புதல்வர்களுக்கும் கட்டளையிட வேண்டியதாவது: தகனபலிக்கடுத்த ஒழுங்கு ஏனென்றால்: தகனப்பலி இரவு முழுவதும் விடியற்காலை வரையிலும் பீடத்தின் மேல் எரிய வேண்டியதுமன்றி, அதன் நெருப்பு அதே பீடத்தின் நெருப்பாய் இருக்கவும் வேண்டும்.
ECTA   ஆரோனுக்கும் அவன் புதல்வருக்கும் நீ யிட்டுச் சொல்லவேண்டியது; எரிபலி பற்றிய சட்டம் இதுவே; இரவு முழுவதும் காலைவரையும் பலிபீடத்தின் நெருப்பின் மேல் எரிபலி இருக்க வேண்டும். பலிபீடத்தின்மேல் நெருப்பு எரிந்து கொண்டே இருக்கவேண்டும்.