Bible Language

Micah 3:11 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   அதின் தலைவர்கள் பரிதானத்துக்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்துக்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் கர்த்தரைச் சார்ந்துகொண்டு: கர்த்தர் எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
IRVTA   அதின் தலைவர்கள் லஞ்சத்திற்கு நியாயந்தீர்க்கிறார்கள்; அதின் ஆசாரியர்கள் கைக்கூலிக்கு உபதேசிக்கிறார்கள்; அதின் தீர்க்கதரிசிகள் பணத்திற்குக் குறிசொல்லுகிறார்கள்; ஆகிலும் அவர்கள் யெகோவாவைச் சார்ந்துகொண்டு: யெகோவா எங்கள் நடுவில் இல்லையோ? தீங்கு எங்கள்மேல் வராது என்கிறார்கள்.
ERVTA   எருசலேமில் உள்ள நீதிபதிகள் வழக்கு மன்றத்தில் யார் வெல்வார்கள் என்று சொல்ல உதவிட லஞ்சம் பெறுகிறார்கள். எருசலேமில் உள்ள ஆசாரியர்கள் ஜனங்களுக்குக் கற்பிப்பதற்கு முன்னால் பணம் பெறுகிறார்கள். ஜனங்களின் தீர்க்கதரிசிகளுக்கு எதிர்காலம் பற்றி தெரிந்துக்கொள்வதற்கு முன்னால் பணம் கொடுக்கவேண்டும். பிறகு அந்தத் தலைவர்கள் கர்த்தருடைய உதவியை எதிர்ப்பார்க்கிறார்கள்." அவர்கள், "எங்களுக்கு தீயவை எதுவும் நடக்காது. கர்த்தர் எங்களோடு வாழ்கிறார்" என்றனர்.
RCTA   அதன் தலைவர்கள் கையூட்டு வாங்கிக் கொண்டு வழக்குத் தீர்க்கிறார்கள்; அதன் அர்ச்சகர்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர், அதன் தீர்க்கதரிசிகள் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர். இவ்வளவும் செய்து கொண்டே "ஆண்டவர் நம் நடுவில் இருக்கிறாரல்லரோ? தீங்கெதுவும் நமக்கு நேராது" என்று சொல்லி, ஆண்டவரை நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
ECTA   அந்த நகரின் தலைவர்கள் கையூட்டு வாங்கிக்கொண்டு தீர்ப்பு வழங்குகிறார்கள்; அதன் குருக்கள் கூலிக்காகப் போதிக்கின்றனர்; இறைவாக்கினர் பணத்துக்காக முன்னுரைக்கின்றனர்; ஆயினும் ஆண்டவரது துணையை நம்பி, "ஆண்டவர் நம் நடுவில் இருக்கின்றார் அல்லவா? எனவே தீமை நம்மை அணுகாது" என்று சொல்லிக்கொள்கின்றார்கள்.