Bible Language

Nehemiah 10:33 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   எங்கள் தேவனுடைய ஆலயத்தின் சகல வேலைக்கும், வருஷந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் கொடுப்போம் என்கிற கடனை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
IRVTA   எங்கள் தேவனுடைய ஆலயத்தின் எல்லா வேலைக்கும், வருடந்தோறும் நாங்கள் சேக்கலில் மூன்றில் ஒரு பங்கைக் * ஏறக்குறைய 4. கிரம்ஸ் வெள்ளி கொடுப்போம் என்கிற பொறுப்பை எங்கள்மேல் ஏற்றுக்கொண்டோம்.
ERVTA   இப்பணமானது ஆசாரியர்கள் ஆலயத்தில் மேஜையின் மேல் வைக்கும் விசேஷ ரொட்டிக்கும் சமூகத்தப்பங்களுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தானியக் காணிக்கைக்கும், தகனப்பலிக்கும் கொடுக்கப்படும். ஓய்வு நாட்களிலும், பிறைச் சந்திர நாட்களிலும் மற்றும் சிறப்புக் கூட்டங்களிலும் செலுத்தும் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இஸ்ரவேல் ஜனங்களைப் பரிசுத்தப்படுத்தும் பாவப்பரிகாரப் பலிகளுக்கும் கொடுக்கப்படும். இப்பணம் தேவாலயத்திற்குத் தேவைப்படும் எவ்வித வேலைகளுக்கும் கொடுக்கப்படும்.
RCTA   இவ்வாறு நம் கடவுளின் ஆலயத் திருப்பணிக்குத் தேவையான அனைத்தையும், அதாவது காணிக்கை அப்பங்கள், நித்திய பலிகள், ஓய்வு நாட்கள், அமாவாசை நாட்கள், குறிக்கப்பட்ட திருநாட்களில் செலுத்த வேண்டிய நித்திய தகனப் பலிகள், அர்ப்பணிக்கப்பட்ட பொருட்கள், இஸ்ராயேலுக்காகச் செய்ய வேண்டிய பாவ நிவாரணப் பலிகள் ஆகியவற்றிற்கு வழிசெய்வோம்.
ECTA   ஆண்டுக்கு நான்கு கிராம் வெள்ளியை நாங்கள் கோவிலுக்குக் கொடுக்க வேண்டும் என்பதை விதிமுறையாக ஏற்படுத்திக் கொண்டோம்.