Bible Language

Nehemiah 9:26 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாய்க் கலகம்பண்ணி, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் புறம்பே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களைத் திடசாட்சியாய்க் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமூட்டுகிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
IRVTA   ஆனாலும் அவர்கள் கீழ்ப்படியாதவர்களாகி, உமக்கு விரோதமாகக் கலகம்செய்து, உம்முடைய நியாயப்பிரமாணத்தைத் தங்களுக்குப் பின்னே எறிந்துவிட்டு, தங்களை உம்மிடத்தில் திருப்பும்படி அவர்களை மிகவும் கடிந்துகொண்ட உம்முடைய தீர்க்கதரிசிகளைக் கொன்றுபோட்டு, கோபமடையச்செய்கிற பெரிய அக்கிரமங்களைச் செய்தார்கள்.
ERVTA   அவர்கள் உமக்கு எதிராகத் திரும்பினார்கள்! அவர்கள் உமது போதனைகளைத் தூர எறிந்தனர்! அவர்கள் உமது தீர்க்கதரிசிகளைக் கொன்றனர். அத்தீர்க்கதரிசிகள் மக்களை எச்சரித்தனர். அவர்களை உம்மிடம் திரும்பக் கொண்டுவர அவர்கள் முயற்சித்தனர். ஆனால் எங்களது முற்பிதாக்கள் உங்களுக்கு எதிராக அக்கிரமம் செய்தனர்!
RCTA   ஆயினும் கீழ்ப்படியாத அவர்கள் உமக்கு எதிராய்க் கிளர்ச்சி செய்தார்கள். உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தார்கள்; உம் பக்கம் மனம் திரும்பும்படி தங்களுக்கு அக்கறையோடு புத்திசொல்லி வந்த உம் இறைவாக்கினர்களைக் கொன்று போட்டார்கள். இவ்வாறு பெரிய தேவதூஷணமான தீச் செயல்களைச் செய்தார்கள்.
ECTA   இருப்பினும், அவர்கள் கீழ்ப்படியாது, உமக்கு எதிராகச் கிளர்ச்சி செய்தனர்; உமது திருச்சட்டத்தைப் புறக்கணித்தனர். உம்மை நோக்கித் திரும்பும்படி அவர்களை எச்சரித்த உமது இறைவாக்கினர்களைக் கொன்றனர். இவ்வாறு பெரும் இறை நிந்தனைகளைச் செய்தார்கள்.