Bible Language

Numbers 13:20 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நிலம் எப்படிப்பட்டது அது வளப்பமானதோ இளப்பமானதோ என்றும்; அதில் விருட்சங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியங்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாயிருந்தது.
IRVTA   நிலம் எப்படிப்பட்டது அது வளமானதோ வளமில்லாததோ என்றும்; அதில் மரங்கள் உண்டோ இல்லையோ என்றும் பாருங்கள்; தைரியம்கொண்டிருந்து, தேசத்தின் கனிகளிலே சிலவற்றைக் கொண்டுவாருங்கள் என்றான். அக்காலம் திராட்சைச்செடி முதற்பழம் பழுக்கிற காலமாக இருந்தது.
ERVTA   நாட்டிலுள்ள மற்ற செய்திகளைப் பற்றியும் தெரிந்துக்கொள்ளுங்கள். அங்குள்ள மண் விவசாயம் செய்வதற்குரிய வளம் உள்ளதா, அல்லது சாரம் அற்றதா? இந்நாட்டில் மரங்கள் உள்ளனவா? அங்குள்ள பழவகைகளில் சிலவற்றைக் கொண்டு வர முயலுங்கள்" என்றான். (அது முதல் திராட்சைகள் பழுக்கும் காலமாய் இருந்தது.)
RCTA   (21) நிலத்தின் தன்மை வளப்பமோ இளப்பமோ, மரங்கள் பல உண்டோ இல்லையோ என்றும் நுணுக்கமாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். துணிவு கொள்ளுங்கள். நாட்டின் காய்கனிகளிலும் சிலவற்றைக் கொண்டு வாருங்கள் என்றார். அக்காலமோ கொடி முந்திரி முதற்பழங்கள் பழுக்கும்காலமாய் இருந்தது.
ECTA   அந்த நாடு செல்வம் மிக்கதா ஏழ்மையானதா, மரங்கள் அங்கு உண்டா இல்லையா என்று பார்த்து வாருங்கள்; துணிவுடன் இருங்கள்; அந்நாட்டின் கனிகள் சிலவற்றைக் கொண்டு வாருங்கள்" என்று கூறினார். அது திராட்சையின் முதற்கனிப் பருவம்.