Bible Language

Numbers 18:8 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   பின்னும் கர்த்தர் ஆரோனை நோக்கி: இஸ்ரவேல் புத்திரர் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப்படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினிமித்தம் அவைகளை உனக்கும் உன் குமாரருக்கும் நித்திய கட்டளையாகக் கொடுத்தேன்.
IRVTA   {ஆசாரியர்கள் மற்றும் லேவியர்களின் காணிக்கை} PS பின்னும் யெகோவா ஆரோனை நோக்கி: “இஸ்ரவேல் மக்கள் பரிசுத்தப்படுத்துகிறவைகளிலெல்லாம் எனக்கு ஏறெடுத்துப் படைக்கப்படும் படைப்புகளைக் காத்துக் கொண்டிருக்கிறீர்களே, அவைகளை உனக்குக் கொடுத்தேன்; அபிஷேகத்தினால் அவைகளை உனக்கும் உன் மகன்களுக்கும் நிரந்தர கட்டளையாகக் கொடுத்தேன்.
ERVTA   "பிறகு கர்த்தர் ஆரோனிடம், "ஜனங்கள் எனக்குத் தருகிற எல்லா அன்பளிப்புகளுக்கும் உங்களையே பொறுப்பாளர்களாக ஆக்கினேன். இஸ்ரவேல் ஜனங்கள் கொடுக்கும் அனைத்து பரிசுத்தமான அன்பளிப்புகளையும் நான் உங்களுக்குத் தருகிறேன். அவற்றை நீயும் உனது மகன்களும் பங்கிட்டுக் கொள்ள வேண்டும். அவை எப்பொழுதும் உங்களுக்கு உரியது.
RCTA   மீண்டும் ஆண்டவர் ஆரோனை நோக்கி: இதோ நம்முடையவையான முதற் பலன்களை உன் காவலிலே ஒப்புவித்து விட்டோம். இஸ்ராயேல் மக்களால் படைக்கப்படும் எல்லாவற்றையும் உங்கள் குருத்துவ ஊழியத்திற்குப் பரிசிலாக உனக்கும் உன் புதல்வர்களுக்கும் தந்தோம். அது நித்திய சட்டமாம்.
ECTA   மேலும் ஆண்டவர் ஆரோனிடம் கூறியது; இதோ எனக்கென உயர்த்திப் படைக்கப்படும் படையல்களில் உன் பொறுப்பில் காக்கப்படும் எதையும், அதாவது இஸ்ரயேல் மக்களின் அர்ப்பணிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தையும் உங்களுக்குத் தந்து விட்டேன்; இது உனக்கும் உன்புதல்வருக்கும் என்றுமுள்ள நியமமாக விளங்கும்.