Bible Language

Psalms 57:3 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை நிந்திக்கையில், அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னை இரட்சிப்பார்: (சேலா). தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
IRVTA   என்னை விழுங்கப்பார்க்கிறவன் என்னை சபிக்கும்போது,
அவர் பரலோகத்திலிருந்து ஒத்தாசை அனுப்பி, என்னைக் காப்பாற்றுவார்: (சேலா).
தேவன் தமது கிருபையையும் தமது சத்தியத்தையும் அனுப்புவார்.
ERVTA   பரலோகத்திலிருந்து அவர் எனக்கு உதவி செய்து, என்னைக் காப்பாற்றுகிறார். எனக்குத் தொல்லை தரும் ஜனங்களை தோல்வி காணச் செய்கிறார். தேவன் தனது உண்மையான அன்பை எனக்குக் காட்டுகிறார்.
RCTA   வானினின்று எனக்கு உதவி புரிந்து மீட்பளிப்பாராக; என்னைத் துன்புறுத்துவோரைக் கேட்டுக்கு ஆளாக்குவாராக: தமது அருளும் சொல்லுறுதியும் எனக்குத் துணைபுரியச் செய்வாராக.
ECTA   வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார். (சேலா) கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார்.