Bible Language

Psalms 69:13 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரககாலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ்செய்கிறேன்; தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
IRVTA   ஆனாலும் யெகோவாவே, உதவிக்காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பம்செய்கிறேன்;
தேவனே, உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
ERVTA   ஆனால் இது கர்த்தராகிய உம்மை நோக்கி நான் உமக்காக ஜெபிக்கும் ஜெபம். நீர் என்னை ஏற்றுக்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். தேவனே, அன்போடு நீர் எனக்குப் பதில் அளிப்பீரென எதிர்ப்பார்க்கிறேன். நான் மீட்படைவதற்கு உம்மீது நம்பிக்கை வைக்க முடியுமென நான் அறிவேன்.
RCTA   ஆனால், ஆண்டவரே, உம்மை நோக்கியே உள்ளது என் மன்றாட்டு: இறைவா, உமக்கு உகந்த நேரத்தில் உம்மை நோக்கி வேண்டுகிறேன். மிகுதியான உம் நன்மைத் தனத்திற்கு ஏற்ப என் மன்றாட்டைக் கேட்டருளும்: உறுதியான உமது அருட்துணைக்கேற்ப எனக்குச் செவிசாய்த்தருளும்.
ECTA   ஆண்டவரே! நான் தக்க காலத்தில் உம்மை நோக்கி விண்ணப்பம் செய்கின்றேன்; கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால் எனக்குப் பதில் மொழி தாரும்; துணை செய்வதில் நீர் மாறாதவர்.