Bible Language

Ruth 1 (LXXEN) English version of the Septuagint Bible

Versions

TOV   நியாயாதிபதிகள் நியாயம் விசாரித்துவரும் நாட்களில், தேசத்திலே பஞ்சம் உண்டாயிற்று; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரானாகிய ஒரு மனுஷன் தன் மனைவியோடும் இரண்டு குமாரரோடுங்கூட மோவாப் தேசத்திலே போய்ச் சஞ்சரித்தான்.
IRVTA   {நகோமியும் ரூத்தும்} PS நியாயாதிபதிகள் * அதிகாரிகள் நியாயம் விசாரித்துவந்த நாட்களில், தேசத்தில் பஞ்சம் உண்டானது; அப்பொழுது யூதாவிலுள்ள பெத்லெகேம் அப்பத்தின் வீடு ஊரைச்சேர்ந்த ஒரு மனிதன் தன்னுடைய மனைவியோடும், இரண்டு மகன்களோடும் மோவாப் தேசத்திற்குப் போய் குடியிருந்தான்.
ERVTA   நியாயதிபதிகளின் ஆட்சிக்காலத்தில், உண்ணக்கூட போதுமான உணவில்லாத மோசமான ஒரு பஞ்சம் யூதா நாட்டில் ஏற்பட்டது. அப்போது யூதாவிலுள்ள பெத்லெகேமை விட்டு, எலிமெலேக்கு என்பவன் தனது மனைவியுடனும், இரண்டு மகன்களுடனும் மலைநாடான மோவாபுக்குச் சென்றான்.
RCTA   நீதிபதிகளுடைய காலத்தில், ஒரு நீதிபதியினுடைய நாட்களிலே நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. அதைக்கண்டு யூதா நாட்டுப் பெத்லகேம் நகர மனிதன் ஒருவன் தன் மனைவியோடும் இரண்டு புதல்வர்களோடும் மோவாப் நாட்டுக்குப் பிழைக்கச் சென்றான்.
ECTA   நீதித் தலைவர்கள் ஆட்சியாளராய் இருந்த காலத்தில். ஒரு கொடிய பஞ்சம் உண்டாயிற்று. யூதாவிலுள்ள பெத்லகேம் ஊரைச் ஒருவர் பிழைப்பதற்கென்று தம் மனைவியையும் மைந்தர் இருவரையும் அழைத்துக் கொண்டு மோவாயு நாட்டிற்கு சென்றார்.