Bible Language

Amos 4:13 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அவர் பர்வதங்களை உருவாக்கினவரும், காற்றைச் சிருஷ்டித்தவரும், மனுஷனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், விடியற்காலத்தை அந்தகாரமாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த ஸ்தானங்களின்மேல் உலாவுகிறவருமாயிருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
IRVTA   அவர் மலைகளை உருவாக்கினவரும், காற்றை உருவாக்கினவரும், மனிதனுடைய நினைவுகள் இன்னதென்று அவனுக்கு வெளிப்படுத்துகிறவரும், அதிகாலையை இருளாக்குகிறவரும், பூமியினுடைய உயர்ந்த இடங்களின்மேல் உலாவுகிறவருமாக இருக்கிறார்; சேனைகளின் தேவனாகிய யெகோவா என்பது அவருடைய நாமம். PE
ERVTA   நான் யார்? நானே மலைகளைப் படைத்தவர். நான் உங்கள் இருதயங்களையும் உண்டாக்கினவர். நான் ஜனங்களுக்கு எவ்வாறு பேசவேண்டும் என்று கற்றுக்கொடுத்தேன். நான் இருளை விடியற் காலையாக மாற்றினேன். நான் பூமியின் மேலுள்ள மலைகைளின் மேல் நடக்கிறேன். நான் யார்? எனது நாமம் சேனைகளின் தேவனாகிய கர்த்தர்."
RCTA   ஏனெனில், அவரே மலைகளை உருவாக்குகிறவர், காற்றை உண்டாக்குகிறவர், தம்முடைய எண்ணத்தை மனிதனுக்கு வெளியிடுகிறவர்; அவரே காலையிருளைப் படைக்கிறவர், மாநிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுகிறவர்; சேனைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பது அவர் பெயராம்.
ECTA   ஏனெனில், மலைகளை உருவாக்கியர் அவரே; காற்றைத் தோற்றுவிப்பவர் அவரே; தம் எண்ணத்தை மனிதனுக்கு வெளிப்படுத்துபவரும் அவரே; காலைப்பொழுதைக் காரிருள் ஆகச்செய்பவரும் அவரே; நிலத்தின் உயர்ந்த இடங்களில் நடமாடுபவரும் அவரே; படைகளின் கடவுளாகிய ஆண்டவர் என்பதே அவரது பெயராகும்.