Bible Language

Genesis 20:9 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை அழைப்பித்து: நீ எங்களுக்கு என்ன காரியஞ்செய்தாய், நீ என்மேலும், என் ராஜ்யத்தின்மேலும் கொடிய பாவம் சுமரப்பண்ணுகிறதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
IRVTA   அப்பொழுது அபிமெலேக்கு ஆபிரகாமை வரவழைத்து: “நீ எங்களுக்கு என்ன காரியம் செய்தாய், நீ என்மேலும், என்னுடைய ராஜ்ஜியத்தின்மேலும் பெரும்பாவம் சுமரச் செய்வதற்கு உனக்கு நான் என்ன குற்றம் செய்தேன்? செய்யத்தகாத காரியங்களை என்னிடத்தில் செய்தாயே என்றான்.
ERVTA   பிறகு அபிமெலேக்கு ஆபிரகாமை அழைத்து அவனிடம்: "நீ ஏன் எங்களுக்கு இதுபோல் செய்தாய்? உனக்கு எதிராக நான் என்ன செய்தேன்? அவள் உன் சகோதரி என்று ஏன் பொய் சொன்னாய்? எனது அரசுக்கு நீ நிறைய தொந்தரவுகளைக் கொடுத்துவிட்டாய். நீ இவ்வாறு செய்திருக்கக் கூடாது.
RCTA   பின் அபிமெலெக் ஆபிரகாமையும் வரவழைத்து: என்ன காரியம் செய்தீர்? நீர் என் மேலும் என் நாட்டின் மேலும் ஒரு பெரிய பாதகத்தைச் சுமத்துவதற்கு நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? செய்யத் தகாததை எங்களுக்குச் செய்தீரே என்று சொல்லி, மீண்டும்:
ECTA   பின் அபிமெலக்கு ஆபிரகாமை வரவழைத்து, "நீர் எங்களுக்கு என்ன காரியம் செய்து விட்டீர்? எனக்கும் என் நாட்டுக்கும் இப்பெரும் பழி நேரும்படி நான் உமக்கு என்ன தீங்கு செய்தேன்? செய்திருக்கக் கூடாதவற்றை நீர் எனக்குச் செய்துவிட்டீரே!