Bible Language

Jeremiah 52:4 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   அவன் ராஜ்யபாரம்பண்ணும் ஒன்பதாம் வருஷம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியிலே பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லா இராணுவமும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராகப் பாளயமிறங்கி, சுற்றிலும் அதற்கு எதிராகக் கொத்தளங்களைக் கட்டினார்கள்.
IRVTA   அவன் ஆட்சிசெய்யும் ஒன்பதாம் வருடம் பத்தாம் மாதம் பத்தாந்தேதியில் பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சாரும், அவனுடைய எல்லாப் படையும் எருசலேமுக்கு விரோதமாய் வந்து, அதற்கு எதிராக முகாமிட்டு, சுற்றிலும் அதற்கு எதிராக முற்றுகைச் சுவர்களைக் கட்டினார்கள்.
ERVTA   எனவே, சிதேக்கியாவின் 9வது ஆட்சியாண்டின் பத்தாவது மாதத்தின் பத்தாவது நாளில் பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எருசலேமிற்கு எதிராகப் படையெடுத்தான். நேபுகாத்நேச்சாரோடு அவனது முழுப்படையும் இருந்தது. பாபிலோனின் படையானது எருசலேமிற்கு வெளியே முகாமிட்டது. நகரச் சுவரைச் சுற்றிலும் அவர்கள் மதிற்சுவர்களைக் கட்டினார்கள். எனவே அவர்களால் சுவரைத் தாண்ட முடிந்தது.
RCTA   நபுக்கோதனசாருடைய ஆளுகையின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதத்தில் பத்தாம் நாள், பபிலோனிய அரசனாகிய நபுக்கோதனசார் தன் எல்லாப் படைகளோடும் யெருசலேமுக்கு எதிராய் வந்து அதனை முற்றுகையிட்டான்; அதற்கு விரோதமாய் அதனைச் சுற்றிலும் கொத்தளங்களைக் கட்டினான்.
ECTA   அவனது ஆட்சியின் ஒன்பதாம் ஆண்டு, பத்தாம் மாதம், பத்தாம் நாளில், பாபிலோனிய மன்னன் நெபுகத்னேசர் தன் எல்லாப் படைகளோடும் எருசலேமுக்கு எதிராக வந்து, பாளையம் இறங்கி, அதைச் சுற்றிலும் முற்றுகைத் தளம் எழுப்பினான்.