Bible Language

Leviticus 13:30 (LXXRP) Septugine Greek Old Testament with Grammar and Strong Code

Versions

TOV   ஆசாரியன் அதைப் பார்த்து, அவ்விடம் மற்றத் தோலைப்பார்க்கிலும் பள்ளமும் அதிலே மயிர் பொன் நிறமும் மிருதுவுமாயிருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்க்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிகுஷ்டம்.
IRVTA   ஆசாரியன் அதைப் பார்த்து, அந்த இடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே முடி பொன் நிறமும் மிருதுவாகவும் இருக்கக்கண்டால், ஆசாரியன் அவனைத் தீட்டுள்ளவன் என்று தீர்மானிக்கக்கடவன்; அது தலையிலும் தாடியிலும் உண்டாகிற சொறிதொழுநோய்.
ERVTA   ஆசாரியன் அதனைச் சோதித்து பார்க்க வேண்டும். அவ்விடம் மற்ற தோலைவிட பள்ளமும் அதிலே உள்ள முடிகள் பொன்நிறமும், மிருதுவாயும் இருந்தால் அவனைத் தீட்டுள்ளவன் என்று அறிவிக்க வேண்டும். அது சொறி தொழு நோய்.
RCTA   பார்க்கும்போது அவ்விடம் மற்றத் தோலை விடக் குழிந்திருக்கிறதென்றும், மயிர் பொன்னிறமாயும் மிருதுவாயும் இருக்கிறதென்றும் கண்டால் அப்படிப்பட்டவர்களைத் தீட்டுள்ளவரென முடிவாய்ச் சொல்வார். உண்மையில் அது தலையின் அல்லது நாடியின் தொழு நோயே.
ECTA   குரு அந்த நோயைச் சோதித்துப் பார்க்க வேண்டும். நோயுள்ள இடம் குழிவாயும், உரோமம் பொன்னிறமாகவும் குறைவாகவும் இருந்தால் தீட்டு எனக் குரு அறிவிப்பார். அது தாடையிலோ தலையிலோ ஏற்படும் சொறி வகையான தொழுநோய் ஆகும்.