Bible Language

Micah 2 (MHB) OPEN SCRIPTURES MORPHOLOGICAL HEBREW BIBLE

Versions

TOV   அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியினால், விடியற்காலமாகிறபோது அதை நடப்பித்து,
IRVTA   {தீயவர்களுக்கு ஐயோ} PS அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்பு செய்ய திட்டமிட்டுத் தங்கள் கையில் வல்லமை இருக்கிறதினால், விடியற்காலமாகிறபோது அதைச் செயல்படுத்தி,
ERVTA   பாவம் செய்யத் திட்டமிட்டிருந்த ஜனங்களுக்குத் துன்பங்கள் வரும். அந்த ஜனங்கள் தம் படுக்கையில் கிடந்த வண்ணம் தீய திட்டங்களைத் தீட்டினார்கள். பிறகு காலை வெனிச்சம் வந்ததும் தங்களது திட்டத்தைச் செயல்படுத்த முனைந்தனர். ஏனென்றால், அவர்களுக்குத் தாங்கள் விரும்பியதைச் செய்யும் வல்லமை இருந்தது.
RCTA   தங்கள் படுக்கைகளில் தீமையைத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் அதைச் செய்து முடிக்கிறார்கள், அவர்கள் கைகளும் அந்தத் திறமையைக் கொண்டுள்ளன!
ECTA   தங்கள் படுக்கைகளின்மேல் சாய்ந்து தீச்செயல் புரியத் திட்டமிட்டுக் கொடுமை செய்ய முயல்பவர்களுக்கு ஐயோ கேடு! பொழுது புலர்ந்தவுடன் தங்கள் கைவலிமையினால் அவர்கள் அதைச்செய்து முடிக்கின்றார்கள்.