Versions
TOV அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாய்க் கட்டுப்பாடுபண்ணி, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிபண்ண அவன் எனக்கு விரோதமாக எழும்பும்படிக்கு, நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
IRVTA அப்பொழுது சவுல் அவனை நோக்கி: நீயும் ஈசாயின் மகனும் எனக்கு விரோதமாக சதிசெய்து, இந்நாளில் இருக்கிறபடி எனக்குச் சதிசெய்ய அவன் எனக்கு எதிராக எழும்பும்படி, நீ அவனுக்கு ரொட்டியும் பட்டயமும் கொடுத்து, தேவசந்நிதியில் அவனுக்காக விசாரித்தது என்ன என்றான்.
ERVTA சவுல் அகிமெலேக்கிடம், "நீயும் ஈசாயின் மகனான தாவீதும் சேர்ந்து எனக்கு எதிராக ஏன் இரகசிய திட்டமிட்டீர்கள்? நீ அவனுக்கு அப்பமும் பட்டயமும் கொடுத்திருக்கிறாய்! அவனுக்காக தேவனிடம் ஜெபம் செய்திருக்கிறாய்? இப்போது தாவீது என்னை தாக்குவதற்குத் தயாராக இருக்கிறான்!" என்றான்.
RCTA சவுல் அவரைப் பார்த்து, "நீரும் இசாயியின் மகனும் எனக்கு விரோதமாய்ச் சதி செய்ய நினைத்தது ஏன்? நீர் அவனுக்கு அப்பங்களையும் வாளையும் கொடுத்து, இன்று வரை பிடிவாதச் சதிகாரனான அவன் எனக்கு விரோதமாய்க் கிளர்ச்சி செய்யும்படி, கடவுள் திருமுன் அவனுக்காக விசாரித்ததும் ஏன்?" என்று கேட்டார்.
ECTA சவுல் அவரிடம், "நீயும் ஈசாயின் மகனும் எனக்கு எதிராக ஏன் சூழ்ச்கி செய்தீர்கள். இந்நாள் வரை அவன் எனக்கெதிராக கிளர்ச்சி செய்யும்படி ஏன் அவனுக்கு நீ அப்பமும் வாளும் தந்துஅவனுக்காக கடவுளின் திருவுள்ளத்தைக் கேட்டறிந்தாய்?" என்று கேட்டார்.