Bible Language

2 Samuel 20 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது பென்யமீன் மனுஷனான பிக்கிரியின் குமாரனாகிய சேபா என்னும் பேருள்ள பேலியாளின் மனுஷன் ஒருவன் தற்செயலாய் அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்குத் தாவீதினிடத்தில் பங்கும் இல்லை, ஈசாயின் குமாரனிடத்தில் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலே, நீங்கள் அவரவர் தங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள் என்றான்.
IRVTA   {சேபா தாவீதுக்கு எதிராகக் கலகம் செய்தல்} PS அப்பொழுது பென்யமீன் மனிதனான பிக்கிரியின் மகனான சேபா என்னும் பெயருள்ள பிரச்சினைக்குரிய மனிதன் ஒருவன் தற்செயலாக அங்கே இருந்தான்; அவன் எக்காளம் ஊதி: எங்களுக்கு தாவீதிடம் பங்கும் இல்லை, ஈசாயின் மகனிடம் எங்களுக்குச் சுதந்தரமும் இல்லை; இஸ்ரவேலர்களே, நீங்கள் அவரவர் தங்கள் வீடுகளுக்குப் போய்விடுங்கள் என்றான்.
ERVTA   பிக்கிரியின் மகனாகிய சேபா என்னும் மனிதன் அந்த இடத்தில் இருந்தான். சேபா எல்லோருக்கும் தொல்லை விளைவிக்கும் பயனற்ற மனிதன். சேபா பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன். ஜனங்களைக் கூட்டுவதற்காக அவன் ஒரு எக்காளம் ஊதினான். பின்பு அவன், "நமக்கு தாவீதிடம் பங்கெதுவும் இல்லை. ஈசாயின் மகனிடத்தில் நமக்கு எந்தப் பாகமும் இல்லை. இஸ்ரவேலே, நாம் நமது கூடாரங்களுக்குத் திரும்புவோம்" என்றான்.
RCTA   அப்பொழுது நடந்ததாவது: ஜெமினி மனிதனான பொக்கிரியின் மகன் சேபா என்ற பெயருள்ள ஒருவன் அவ்விடம் இருந்தான். அவன் பெலியாலின் ஊழியன். அவன் எக்காளம் ஊதி, "தாவீதிடம் எங்களுக்குப் பங்குமில்லை; இசாயி மகனிடம் எங்களுக்கு மரபுரிமையும் இல்லை. இஸ்ராயேலரே! நீங்கள் உங்கள் கூடாரங்களுக்குப் போய்விடுங்கள்" என்று கூறினான்.
ECTA   அப்போது பென்யமின் குலத்தைச் சார்ந்த, பிக்ரியின் மகன் சேபா என்ற இழி மகன் அங்கு இருந்தான். அவன் எக்காளம் ஊதி, "எங்களுக்பு தாவீதிடம் பங்கு இல்லை; ஈசாயின் மகனிடம் மரபுரிமையும் இல்லை; இஸ்ரயேலரே! ஒவ்வொருவரும் உங்கள் கூடாரங்களுக்குச் செல்லுங்கள்" என்றான்.