Bible Language

2 Chronicles 16:1 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாய் வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
IRVTA   {ஆசாவின் இறுதி வருடங்கள்} PS ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருடத்திலே, இஸ்ரவேலின் ராஜாவாகிய பாஷா யூதாவுக்கு விரோதமாக வந்து, ஒருவரும் யூதாவின் ராஜாவாகிய ஆசாவினிடத்தில் போக்கும் வரத்துமாயிராதபடிக்கு ராமாவைக் கட்டினான்.
ERVTA   ஆசாவின் 36வது ஆட்சி ஆண்டில் யூதா நாட்டினை பாஷா தாக்கினான். பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆவான். அவன் ராமா என்னும் நகருக்குச் சென்று அதையே ஒரு கோட்டையாகக் கட்டினான். ஜனங்கள் யூதாவின் அரசனான ஆசாவிடம் செல்வதையோ அல்லது அவனிடமிருந்து திரும்புவதையோ தடுப்பதற்கான இடமாக ராமா ஊரினைப் பயன்படுத்தினான்.
RCTA   ஆசாவினது ஆட்சியின் முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ராயேலில் அரசன் பாசா யூதா நாட்டிற்கு எதிராகப் படையெடுத்து வந்து ராமாவைச் சுற்றிலும் அரண் எழுப்பினான். இவ்வாறு ஆசாவின் நாட்டில் போக்கு வரத்தைத் தடை செய்ய அவன் எண்ணம் கொண்டிருந்தான்.
ECTA   ஆசா ஆட்சியேற்ற முப்பத்தாறாம் ஆண்டில் இஸ்ரயேலின் அரசன் பாசா யூதா நாட்டை எதிர்த்து வந்தான். யூதா அரசன் ஆசாவிடம் போவதையும் வருவதையும் தடைசெய்யுமாறு பாசா இராமாவைச் கட்டி எழுப்பலானான்.