Bible Language

2 Chronicles 35:14 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   பின்பு தங்களுக்காகவும் ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் புத்திரராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் நிணத்தையும் செலுத்துகிறதில், இரவு மட்டும் வேலையாயிருந்தபடியினால், லேவியர் தங்களுக்காகவும், ஆரோனின் புத்திரராகிய ஆசாரியருக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
IRVTA   பின்பு தங்களுக்காகவும் ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்; ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்கள் சர்வாங்க தகனபலிகளையும் கொழுப்பையும் செலுத்துகிறதில், இரவு வரை வேலையாயிருந்ததால், லேவியர்கள் தங்களுக்காகவும், ஆரோனின் சந்ததியாராகிய ஆசாரியர்களுக்காகவும் ஆயத்தப்படுத்தினார்கள்.
ERVTA   இவை முடிந்த பிறகு, லேவியர்கள் தங்களுக்கென்று இறைச்சியைப் பெற்றுக்கொண்டனர். ஆரோனின் சந்ததிகளான ஆசாரியர்களும் பெற்றுக்கொண்டனர். ஆசாரியர்கள் இருட்டுகிறவரை கடினமான வேலையை செய்தார்கள். அவர்கள் தகனபலிகளை எரிப்பதும், கொழுப்பை எரிப்பதுமாக இருந்தார்கள்.
RCTA   பின் தங்களுக்காகவும் குருக்களுக்காகவும் பாஸ்காவைத் தயார்ப்படுத்தினர். ஏனெனில், குருக்கள் தகனப் பலிகளையும் கொழுப்பையும் ஒப்புக்கொடுப்பதில் இரவு வரை ஈடுபட்டிருந்தனர். எனவே லேவியர் கடைசியில் தாங்களும், ஆரோனின் புதல்வரான குருக்களும் உண்ணும்படி பாஸ்காவைத் தயாரித்தனர்.
ECTA   இவ்வாறே தங்களுக்காகவும், குருக்களுக்காகவும், பாஸ்காவை ஆயத்தம் செய்தனர். ஆரோனின் மக்களான குருக்கள் எரிபலியையும், கொழுப்பானவற்றையும் இரவுவரை செலுத்தியதால், லேவியர் தங்களுக்காகவும் ஆரோனின் புதல்வர்களான குருக்களுக்காகவும் ஆயத்தம் செய்தனர்.