Bible Language

2 Kings 3:13 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பனின் தீர்க்கதரிசிகளிடத்திலும், உம்முடைய தாயாரின் தீர்க்கதரிசிகளிடத்திலும் போம் என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, கர்த்தர் இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியரின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
IRVTA   எலிசா இஸ்ரவேலின் ராஜாவைப் பார்த்து: எனக்கும் உமக்கும் என்ன? நீர் உம்முடைய தகப்பன் மற்றும் தாயாருடைய தீர்க்கதரிசிகளிடம் போ என்றான்; அதற்கு இஸ்ரவேலின் ராஜா: அப்படியல்ல, யெகோவா இந்த மூன்று ராஜாக்களையும் மோவாபியர்களின் கையில் ஒப்புக்கொடுக்கிறதற்கு வரவழைத்தார் என்றான்.
ERVTA   எலிசா இஸ்ரவேல் அரசனான யோராமிடம், "நான் உங்களுக்கு செய்வதற்கு எதுவுமில்லை. உங்கள் தந்தை மற்றும் தாயின் தீர்க்கதரிசிகளிடம் செல்லுங்கள்!" என்றான். அதற்கு இஸ்ரவேலின் அரசன், "இல்லை, நாங்கள் உங்களைப் பார்க்கவே வந்துள்ளோம். ஏனென்றால் கர்த்தர் மோவாப் மூலம் எங்களைத் தோற்கடிக்க எங்கள் மூவரையும் ஒன்றாகக் கூட்டியுள்ளார். எங்களுக்கு நீங்கள் உதவவேண்டும்" என்றான்.
RCTA   எலியேசு இஸ்ராயேல் அரசனைப் பார்த்து, "உமக்கும் எனக்கும் என்ன? உம் தாய் தந்தையரின் இறைவாக்கினரிடம் செல்லும்" என்றார். அப்போது இஸ்ராயேலின் அரசன், "மோவாபியர் கையிலே இம்மூன்று அரசர்களையும் ஒப்புவிக்க ஆண்டவர் அவர்களை இங்கே ஒன்றாகக் கூட்டி வந்ததின் காரணம் என்ன?" என வினவினான்.
ECTA   எலிசா இஸ்ரயேல் அரசனிடம், "உனக்கும் எனக்கும் என்ன உறவு? உன் தந்தையின் இறைவாக்கினரையும், உன் தாயின் இறைவாக்கினரையும் நாடிச் செல்!" என்றார். ஆனால், இஸ்ரயேலின் அரசன், "இல்லை, ஆண்டவர்தாம் அரசர்களாகிய எங்கள் மூவரையும், மோவாபியர் கையில் ஒப்புவிக்கும்படி இங்கே கூட்டி வந்துள்ளார்" என்றான்.