Bible Language

2 Kings 3:27 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது அவன் தன் ஸ்தானத்தில் ராஜாவாகப்போகிற தன் சேஷ்டபுத்திரனைப் பிடித்து, அலங்கத்தின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்மேல் கடுங்கோபம் மூண்டதினால், அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள்.
IRVTA   அப்பொழுது அவன் தன்னுடைய இடத்தில் ராஜாவாகப்போகிற தன் மூத்த மகனைப் பிடித்து, மதிலின்மேல் அவனைச் சர்வாங்க தகனமாகப் பலியிட்டான்; அப்பொழுது இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால் * இஸ்ரவேலர்கள்மேல் கடுங்கோபம் ஏற்பட்டதால். இந்த வாக்கியம் அதிகமாக பழைய ஏற்பாட்டில் தேவன் கோபமாயிருக்கிறார் என்று காட்டப்பட்டுள்ளது. அல்லது மோவாபியர்கள் இராஜாவாகப் போகிற மகனையே பலியிட்டதால், இஸ்ரவேலர்கள் மேல் அதிக கோபம் கொண்டு தாக்கியிருக்கலாம். ஆகையால் யுத்தத்தை விட்டு போயிருக்கலாம். , அவர்கள் அவனைவிட்டுப் புறப்பட்டு, தங்கள் தேசத்திற்குத் திரும்பிவிட்டார்கள். PE
ERVTA   பிறகு தன்னைத் தொடர்ந்து ஆட்சியில் அமர இருக்கிற தன் மூத்த மகனை மோவாபின் அரசன் அழைத்தான். நகரைச்சுற்றியுள்ள சுவரில் தன் மகனையே சர்வாங்க தகனபலியாகச் செலுத்தினான். இது இஸ்ரவேல் ஜனங்களைப் பெரிதும் பாதித்தது. எனவே அவர்கள் மோவாபை விட்டு விட்டு தங்கள் நாட்டிற்குப் போய்விட்டனர்.
RCTA   அப்போது தனக்குப்பின் அரசாள வேண்டிய தன் தலைமகனைப் பிடித்து மதிலின் மேல் அவனைத் தகனப்பலியாக ஒப்புக்கொடுத்தான். இதனால் இஸ்ராயேலில் கடுஞ்சினம் எழ, அவர்கள் விரைவில் அவனைவிட்டு அகன்று தம் சொந்த நாடு திரும்பினார்.
ECTA   பின்னர், அவன் தனக்குப்பின் அரசாளும் உரிமையுள்ள தன் தலைமகனை இட்டுச் சென்று, மதிலின்மேல் அவனை எரிபலியாக ஒப்புக் கொடுத்தான். இஸ்ரயேலர் தங்களுக்கு எதிராகக் கடுஞ்சினம் மூள்வதைக் கண்டு, அவனை விட்டு அகன்று தம் சொந்த நாட்டுக்குத் திரும்பினர்.