Bible Language

2 Samuel 15:20 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடே நடந்துவரும்படிக்கு அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகக்கூடிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன் சகோதரரையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடே இருப்பதாக என்றான்.
IRVTA   நீ நேற்றுதானே வந்தாய்; இன்று நான் உன்னை எங்களோடு நடந்துவரும்படி அழைத்துக்கொண்டு போகலாமா நான் போகவேண்டிய இடத்திற்குப் போகிறேன்; நீ உன்னுடைய சகோதரர்களையும் அழைத்துகொண்டு திரும்பிப்போ; கிருபையும் உண்மையும் உன்னோடு இருப்பதாக என்றான்.
ERVTA   நேற்றுதான் நீ என்னோடு சேர்வதற்கு வந்தாய். நான் எங்கே செல்கிறேன் என்று தெரியாதபொழுது, உன்னையும் அலைந்து திரிய என்னோடு அழைத்துச் செல்லவேண்டுமா? வேண்டாம். திரும்பிப் போ. உனது சகோதரர்களையும் உன்னோடு அழைத்துச் செல். உனக்கு இரக்கமும் உண்மையும் காட்டப்படட்டும்" என்றான்.
RCTA   நேற்றுத் தானே நீ இங்கு வந்தாய்? இன்று எங்களுடன் வரும்படி நான் உன்னை வற்புறுத்துவது முறையா? நான் மட்டும் போகவேண்டிய இடத்திற்குப் போவேன். நீயும் உன் சகோதரரும் திரும்பிப்போங்கள்; நீ ஊக்கமும் பிரமாணிக்கமுமுள்ளவனுமாய் இருந்தால், ஆண்டவரும் உனக்கு இரக்கத்தையும் பிரமாணிக்கத்தையும் காட்டுவார்" என்றார்.
ECTA   நீ நேற்று வந்தவன். இன்று நான் உன்னை எங்களோடு அலையச் செய்யலாமா? கால் போன போக்கிலே நான் போகின்றேன். திரும்பிச் செல். உன் சகோதரர்களையும் கூட்டிச் செல். உண்மையுள்ளவரின் பேரன்பு உன்னோடு இருப்பதாக" என்று கூறினார்.