Bible Language

Hebrews 12:28 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆதலால், அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாய் ஆராதனை செய்யும்படி கிருபையைப் பற்றிக்கொள்ளக்கடவோம்.
IRVTA   ஆகவே, அசைவில்லாத ராஜ்யத்தைப் பெறுகிறவர்களாகிய நாம் பயத்தோடும் பக்தியோடும் தேவனுக்குப் பிரியமாக ஆராதனை செய்வதற்காக கிருபையைப் பற்றிக்கொள்ளவேண்டும்.
ERVTA   அசைக்கப்பட முடியாத ஓர் இராஜ்யத்தை நாம் பெற்றுக் கொண்டிருப்பதால் நாம் நன்றி சொல்லவேண்டும். மிகவும் அச்சத்தோடும் மரியாதையோடும் கூடிய ஒப்புக்கொள்ளத்தக்க ஒரு வழியில் நாம் தேவனை வழிபடவேண்டும்.
RCTA   ஆதலால் அசையாத அரசைப் பெற்றுக் கொண்ட நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துவோமாக. இந்நன்றியுணர்ச்சியில் பயபக்தியோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு ஏற்ற முறையில் வழிபாடு செய்வோமாக.
ECTA   ஆதலின், அசைக்கமுடியாத அரசைப் பெற்றுக்கொண்ட நாம், நன்றியுள்ளவர்களாய் இருப்போம். நன்றியுணர்வோடும், இறைப்பற்றோடும், அச்சத்தோடும் கடவுளுக்கு உகந்தமுறையில் அவருக்கு வழிபாடு செய்வோம்.