Bible Language

Hosea 5:15 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடுமட்டும் நான் என் ஸ்தானத்துக்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாய்த் தேடுவார்கள்.
IRVTA   அவர்கள் தங்கள் குற்றங்களை உணர்ந்து, என் முகத்தைத் தேடும்வரை நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன்; தங்கள் ஆபத்தில் என்னைக் கருத்தாகத் தேடுவார்கள். PE
ERVTA   அவர்கள் தங்களைக் குற்றவாளிகளென்று ஏற்றுக்கொள்ளும்வரை, அவர்கள் என்னைத் தேடும்வரை நான் எனது இடத்திற்குத் திரும்பிப்போவேன். ஆம், அவர்கள் தம் ஆபத்தில் என்னைத் தேடக் கடுமையாக முயற்சி செய்வார்கள்."’
RCTA   தங்கள் குற்றத்தை அவர்கள் ஏற்றுக் கொண்டு நமது முகத்தை அவர்கள் தேடும் வரை, நாம் நம்முடைய இடத்திற்கே மறுபடியும் திரும்பிப் போய் அவர்களுக்காகக் காத்திருப்போம்.
ECTA   தங்கள் குற்றத்திற்கான பழியை ஏற்று, என்னைத் தேடி வரும்வரை, நான் என் இடத்திற்குத் திரும்பிப் போய்விடுவேன். தங்கள் துன்பத்திலே அவர்கள் என்னைத் தேடுவார்கள்.