Bible Language

Jeremiah 5 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நியாயஞ்செய்கிற மனுஷனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களிலே திரிந்துபார்த்து, விசாரித்து, அதின் வீதிகளிலே தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
IRVTA   {நீதிசெய்கிறவன் ஒருவனுமில்லை} PS நியாயஞ்செய்கிற மனிதனைக் கண்டுபிடிப்பீர்களோ என்றும், சத்தியத்தைத் தேடுகிறவன் உண்டோ என்றும், எருசலேமின் தெருக்களில் சுற்றிப்பார்த்து, விசாரித்து, அதின் வீதிகளில் தேடுங்கள்; காண்பீர்களானால் அதற்கு மன்னிப்புத் தருவேன்.
ERVTA   "எருசலேம் தெருக்களில் நடவுங்கள். சுற்றிப் பார்த்து இவற்றைப்பற்றி எண்ணுங்கள். நகரத்தின் பொது சதுக்கங்களைத் தேடுங்கள். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் பாருங்கள். அவன் நேர்மையான காரியங்களைச் செய்கிறவனாகவும் உண்மையைத் தேடுகிறவனாகவும் இருக்கவேண்டும். உங்களால் ஒரு நல்ல மனிதனைக் கண்டுபிடிக்க முடியுமானால் நான் எருசலேமை மன்னிப்பேன்!
RCTA   யெருசலேமின் தெருக்களில் இங்குமங்கும் ஓடிச் சுற்றித் தேடி உற்றுப் பாருங்கள்; அதன் பொதுவிடங்களில் தேடி, நீதியைக் கடைப்பிடித்து உண்மையைத் தேடுபவன் எவனாவது உண்டோ என்று பாருங்கள்: அவனை முன்னிட்டுப் பட்டணத்துக்கு மன்னிப்பு அளிப்போம்.
ECTA   நீதியைக் கடைப்பிடித்து உண்மையை நாடும் ஒரு மனிதரைக் கண்டுபிடிக்க முடியுமாவென எருசலேமின் தெருக்களில் சுற்றிப் பார்த்துத்; தெரிந்துகொள்; அவளுடைய பொது இடங்களில் கவனமாய்த் தேடிப்பார்; கண்டுபிடித்தால், அவளுக்கு மன்னிப்பு அளிப்பேன்.