Bible Language

Leviticus 22:2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   இஸ்ரவேல் புத்திரர் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்த வஸ்துக்களைக்குறித்து ஆரோனும் அவன் குமாரரும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடிக்கு எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களோடே சொல்; நான் கர்த்தர்.
IRVTA   “இஸ்ரவேல் மக்கள் எனக்கென்று நியமித்துச் செலுத்துகிற பரிசுத்தப் பொருட்களைக்குறித்து ஆரோனும் அவனுடைய மகன்களும் என் பரிசுத்த நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காதபடி எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று அவர்களுக்குச் சொல்; நான் யெகோவா.
ERVTA   "ஆரோனிடமும் அவனது மகன்களிடமும் கூறு: இஸ்ரவேல் ஜனங்கள் எனக்குக் கொடுக்கும் பொருட்கள் பரிசுத்தமானவையாக இருக்கும். அவை என்னுடையவை. எனவே ஆசாரியர்களாகிய நீங்கள் அவற்றை எடுத்துக்கொள்ளக்கூடாது. நீங்கள் பரிசுத்த பொருட்களை உங்கள் சொந்த உபயோகத்துக்குப் பயன்படுத்தினால் நீங்கள் என் பெயருக்கு மரியாதை செலுத்தவில்லை என்று பொருள்படும். நானே கர்த்தர்.
RCTA   நீ ஆரோனோடும் அவன் புதல்வரோடும் பேசி, இஸ்ராயேல் மக்களால் நமக்கு நேர்ந்து விடப்பட்ட காணிக்கைகளை அவர்கள் தொடவேண்டாமென்றும், அவர்களே நமக்குச் செலுத்திவருகிற பரிசுத்த மாக்கப்பட்டவைகளின் பெயரை இழிவுபடுத்த வேண்டாமென்றும் சொல். நாம் ஆண்டவர்.
ECTA   இஸ்ரயேல் மக்கள் எனக்கு நேர்ச்சையாகச் செலுத்தும் தூய பொருள்களால் ஆரோனும் அவன் பிள்ளைகளும் என் பெயரை இழிவுபடுத்தாதபடி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும் என்று அவர்களிடம் கூறு. நானே ஆண்டவர்.