Bible Language

Deuteronomy 14:27 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   லேவியனுக்கு உன்னோடே பங்கும் சுதந்தரமும் இல்லாதபடியால் அவனைக் கைவிடாயாக.
IRVTA   லேவியனுக்கு உன்னுடன் பங்கும் சொத்தும் இல்லாததால் அவனைக் கைவிடாதே.
ERVTA   உங்கள் நகரில் வசிக்கின்ற லேவியரை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள். (அவர்களுக்கும் உங்கள் உணவை பகிர்ந்தளியுங்கள்) ஏனெனில், அவர்களுக்கு உங்களைப்போன்று எந்த சொத்தும் சுதந்திரமும் கிடையாது.
RCTA   உன் நகரத்தில் இருக்கிற லேவியனுக்கு உன்னோடு பங்கும் உரிமையும் இல்லாததனால், அவனை மறந்து விடாதே, எச்சரிக்கை!
ECTA   உன் நகரில் குடியிருக்கும் லேவியனுக்கு உன்னோடு பங்கும் சொத்துரிமையும் இல்லாததால், அவனைக் கைவிட்டு விடாதே.