Bible Language

Ecclesiastes 2 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   நான் என் உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அநுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாயிருந்தது.
IRVTA   {இன்பமும் மாயையே} PS நான் என்னுடைய உள்ளத்திலே சொல்லிக்கொண்டது என்னவென்றால்: வா, இப்பொழுது உன்னைச் சந்தோஷத்தினாலே சோதித்துப்பார்ப்பேன், இன்பத்தை அனுபவி என்றேன்; இதோ, இதுவும் மாயையாக இருந்தது.
ERVTA   நான் எனக்குள்: "நான் வேடிக்கை செய்வேன். என்னால் முடிந்தவரை எல்லாவற்றிலும் மகிழ்ச்சி அடைவேன்" என்று சொன்னேன். ஆனால் நான் இவையும் பயனற்றவை என்று கற்றுக்கொண்டேன்.
RCTA   வா, பற்பல வித இன்பங்களை நாடி எல்லா நன்மைகளின் தேனையும் உண்டு களிப்போம் என்று என் உள்ளத்தில் தீர்மானித்தேன். ஆனால், அவைகளிலும் பயனில்லை என்று கண்டேன்.
ECTA   "இன்பத்தில் மூழ்கி அதன் இனிமையைச் சுவைப்போம்; நெஞ்சே! நீ வா!" என்றேன். அதுவும் வீண் என நான் கண்டேன்.