Bible Language

Ephesians 4 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஆதலால், கர்த்தர்நிமித்தம் கட்டுண்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தியென்னவெனில், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குப் பாத்திரவான்களாய் நடந்து,
IRVTA   {கிறிஸ்துவின் சரீரத்திற்குள்ளான ஐக்கியம்} PS எனவே, கர்த்தருக்காக சிறைப்பட்டவனாகிய நான் உங்களுக்குச் சொல்லுகிற புத்தி என்னவென்றால், நீங்கள் அழைக்கப்பட்ட அழைப்புக்குத் தகுதி உள்ளவர்களாக நடந்து,
ERVTA   நான் கர்த்தரைச் சார்ந்தவனாதலால் சிறையில் இருக்கிறேன். தேவன் உங்களைத் தம் மக்களாகத் தேர்ந்தெடுத்தார். தேவனுடைய மக்கள் வாழும் முறைப்படி நீங்களும் வாழவேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
RCTA   ஆகவே, ஆண்டவருடைய கைதியாகிய நான், உங்களுக்கு அறிவுறுத்துவதாவது: நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கேற்ற வாழ்க்கை நடத்துங்கள்.
ECTA   ஆதலால் ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள்.