Bible Language

Exodus 19:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
IRVTA   மலையைச்சுற்றிலும் நீ ஒரு எல்லையைக் குறித்து, மக்கள் மலையில் ஏறாதபடியும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடியும் எச்சரிக்கையாக இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
ERVTA   (12-13) எல்லா ஜனங்களும் மலையை நெருங்காதிருக்கும்படி அவர்களுக்கு நீ கூறவேண்டும். ஒரு எல்லையை வரைந்து, ஜனங்கள் அதைத் தாண்டிச் செல்லாதபடி பார்த்துக்கொள். மலையைத் தொடும் மனிதனோ, மிருகமோ கொல்லப்பட வேண்டும். அவனைக் கற்களால் தாக்கியோ, அம்புகளை எய்தோ கொல்ல வேண்டும். கொல்லப்பட்டவனைப் பிறர் தொடக்கூடாது. எக்காளம் தொனிக்கும் வரைக்கும் ஜனங்கள் காத்திருக்க வேண்டும். அதன் பின்னரே அவர்கள் மலைக்கு சமீபம் செல்லலாம்” என்றார்.
RCTA   மலையைச் சுற்றிலும் மக்கள் மீறிக் கடக்கக் கூடாத எல்லைக் கல்லை நாட்டி: நீங்கள் மலைமேல் ஏற வேண்டாம்; அதன் அடிவாரத்தை முதலாய்த் தொடவேண்டாம்; எச்சரிக்கையாய் இருங்கள் என்றும்; மலையைத் தொடுபவன் சாகவே சாவான் என்றும்;
ECTA   மலையைச் சுற்றிலும் மக்களுக்கான எல்லைகளைத் தீர்மானித்துக்கொடு. உங்களில் எவரும் மலைமேல் ஏறாதபடியும், அதன் அடிவாரத்தைக்கூடத் தொடாதபடியும் எச்சரிக்கையாயிருங்கள். மலையைத் தொடுபவர் யாரானாலும் கொல்லப்படுவது உறுதி.