Bible Language

Ezekiel 48:10 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   வடக்கே இருபத்தையாயிரங்கோல் நீளமும், மேற்கே பதினாயிரங்கோல் அகலமும், கிழக்கே பதினாயிரங்கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங்கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பிதநிலமானது ஆசாரியருடையதாயிருக்கும்; கர்த்தருடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
IRVTA   வடக்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமும், மேற்கே பத்தாயிரம்கோல் அகலமும், கிழக்கே பத்தாயிரம்கோல் அகலமும், தெற்கே இருபத்தைந்தாயிரம் கோல் நீளமுமாகிய இந்தப் பரிசுத்த அர்ப்பணிக்கப்பட்ட நிலமானது ஆசாரியருடையதாக இருக்கும்; யெகோவாவுடைய பரிசுத்த ஸ்தலம் அதின் நடுவிலே இருப்பதாக.
ERVTA   இத்தனியான பகுதி ஆசாரியர்களுக்கும் லேவியர்களுக்கும் பங்கிட்டுக் கொடுக்கப்படவேண்டும். ‘ஆசாரியர்கள் இதன் ஒரு பகுதியைப் பெறுவார்கள். இப்பகுதி 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக வடபுறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக மேற்கு புறத்திலும் 10,000 முழம் (3.3 மைல்) அகலமாக கிழக்குப் புறத்திலும் 25,000 முழம் (8.3 மைல்) நீளமாக தெற்கு புறத்திலும் இருக்கும். இப்பகுதியின் நடுவில் கர்த்தருடைய ஆலயம் அமைக்கப்படும்.
RCTA   இந்தப் பரிசுத்த பங்கு- அதாவது வடக்கே இருபத்தையாயிரம் கோல் நீளம், மேற்கே பதினாயிரம் கோல் அகலம், கிழக்கே பதினாயிரம் கோல் அகலம், தெற்கே இருபத்தையாயிரம் கோல் நீளம் கொண்ட அந்த நிலம் பரிசுத்த இடத்தின் அர்ச்சகர்களுக்கு உரியது; ஆண்டவருடைய பரிசுத்த இடம் அதன் நடுவில் இருக்கும்.
ECTA   அது குருக்களுக்குரிய புனிதப் பகுதியாய் இருக்கும். அது வடக்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் மேற்குப்பக்கம் பத்தாயிர முழமும் கிழக்குப் பக்கம் பத்தாயிர முழமும், தெற்குப் பக்கம் இருபத்தையாயிர முழமும் உடையதாய் இருக்கும். அதன் நடுவில் ஆண்டவரின் தூயகம் இருக்கும்.