Bible Language

Genesis 19:22 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   தீவிரமாய் அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேருமட்டும் நான் ஒன்றும் செய்யக்கூடாது என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் என்னப்பட்டது.
IRVTA   விரைவாக அங்கே ஓடித் தப்பித்துக்கொள்; நீ அங்கே போய்ச் சேரும்வரை நான் ஒன்றும் செய்யமுடியாது” என்றார்; ஆகையால் அந்த ஊர் சோவார் * சின்ன ஊர் எனப்பட்டது. PS
ERVTA   ஆனால் அங்கு வேகமாக ஓடு. அங்கு நீ பாதுகாப்பாகப் போய்ச் சேரும்வரை சோதோம் நகரத்தை அழிக்கமாட்டேன்" என்றான். (அந்நகரின் பெயர் சோவார். ஏனெனில் அது மிகச் சிறிய நகரம்)
RCTA   நீ அங்கே விரைந்தோடித் தப்பித்துக்கொள். எனென்றால், நீ அவ்விடம் சேருமட்டும் நாம் ஒன்றும் செய்யக் கூடாதிருக்கிறது என்றார். இதனால் அந்த நகரத்துக்கச் செகோர் என்னும் பெயர் வழங்கிற்று.
ECTA   நீ அங்கு விரைந்தோடித் தப்பித்துக் கொள். நீ அங்குச் சென்று சேருமட்டும் என்னால் ஒன்றும் செய்ய இயலாது" என்றார். இதனால் அந்த நகருக்குச் "சோவார்" என்னும் பெயர் வழங்கிற்று.