Bible Language

Genesis 31:43 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் பிரதியுத்தரமாக: இந்தக் குமாரத்திகள் என் குமாரத்திகள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற யாவும் என்னுடையவைகள்; என் குமாரத்திகளாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யக்கூடும்?
IRVTA   {லாபான் யாக்கோபு உடன்படிக்கை செய்துகொள்ளுதல்} PS அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் மறுமொழியாக: “இந்த மகள்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற அனைத்தும் என்னுடையவைகள்; என் மகள்களாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யமுடியும்?
ERVTA   லாபான் யாக்கோபிடம், "இந்தப் பெண்கள் என் மகள்கள். இந்தக் குழந்தைகள் என்னைச் சேர்ந்தவர்கள். இந்த மிருகங்கள் எல்லாம் என்னுடையவை. நான் இங்கு காண்கிற அனைத்தும் என்னுடையவை. ஆனால் எனது மகள்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் என்னால் தீமை செய்ய முடியாது.
RCTA   அதற்கு லாபான்: இவர்கள் என் புதல்வியர்; (இவர்கள்) பிள்ளைகள் என் பிள்ளைகள். இந்த மந்தை என் மந்தை. அப்படியிருக்க, என் புதல்வியர்க்கும் பேரப்பிள்ளைகளுக்கும் நான் என்னசெய்யக் கூடும்?
ECTA   அதற்கு மறுமொழியாக லாபான் யாக்கோபை நோக்கி, "இப்புதல்வியர் என் புதல்வியர்; இப்பிள்ளைகள் என் பிள்ளைகள். இம் மந்தை என் மந்தை. நீர் காண்பவை யாவும் என்னுடையவையே. இப்படியிருக்க, என் புதல்வியர்க்கோ அவர்கள் பெற்றெடுத்த பிள்ளைகளுக்கோ நான் இன்று என்ன செய்துவிடப்போகிறேன்?