Bible Language

Genesis 5:29 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கர்த்தர் சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான் என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பேரிட்டான்.
IRVTA   “யெகோவா சபித்த பூமியிலே நமக்கு உண்டான வேலையிலும், நம்முடைய கைகளின் பிரயாசத்திலும், இவன் நம்மைத் தேற்றுவான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
ERVTA   அவனுக்கு நோவா என்று பெயரிட்டான். அவன், "நாம் விவசாயிகளாக பாடுபடுகிறோம். ஏனென்றால் தேவன் பூமியைச் சபித்திருக்கிறார். ஆனால் நோவா, நமக்கு இளைப்பாறுதலை அளிப்பான்" என்றான்.
RCTA   ஆண்டவராலே சபிக்கப்பட்ட (இந்தப்) பூமியில் எங்கள் உழைப்பிலும் களைப்பிலும் இவனே எங்களுக்குத் தேற்றுபவன் ஆவான். என்று சொல்லி அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
ECTA   அவன் "ஆண்டவரின் சாபத்திற்குள்ளான மண்ணில் நமக்கு உண்டான கடின வேலையிலும் உழைப்பிலும் நமக்கு ஆறுதல் அளிப்பான்" என்று சொல்லி அவனுக்கு "நோவா" என்று பெயரிட்டான்.