Bible Language

Isaiah 14:9 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   கீழே இருக்கிற பாதாளம் உன்னிமித்தம் அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உன்னிமித்தம் எழுப்பி, ஜாதிகளுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கப்பண்ணுகிறது.
IRVTA   கீழே இருக்கிற பாதாளம் உன்னைப்பார்த்து அதிர்ந்து, உன் வருகைக்கு எதிர்கொண்டு, பூமியில் அதிபதிகளாயிருந்து செத்த இராட்சதர் யாவரையும் உனக்காக எழுப்பி, மக்களுடைய எல்லா ராஜாக்களையும் அவர்களுடைய சிங்காசனங்களிலிருந்து எழுந்திருக்கச்செய்கிறது.
ERVTA   மரணத்தின் இடமான பாதாளம் அதிர்கிறது. ஏனென்றால் நீ வந்துகொண்டிருக்கிறாய். உனக்காக பூமியில் இருந்த அனைத்துத் தலைவர்களின் ஆவிகளையும் பாதாளம் எழுப்பிக்கொண்டிருக்கிறது. அரசர்களை அவர்களின் சிங்காசனத்திலிருந்து பாதாளம் எழுந்து நிற்கச் செய்துகொண்டிருக்கிறது. உன் வருகைக்காக அவை தயாராக உள்ளன.
RCTA   நீ வரும்போது எதிர் கொண்டு சந்திக்கும்படி கீழுள்ள பாதாளம் துள்ளி எழுகிறது; உலகத்தின் தலைவர்களின் நிழல்கள் எல்லாம் வந்துன்னை வரவேற்க எழுப்புகின்றது; பல நாட்டு மன்னர்களாய் இருந்தவரெல்லாம் அரியணை விட்டு எழுந்திருக்கச் செய்கின்றது.
ECTA   நீ வரும்போது உன்னை எதிர்கொள்ளக் கீழுள்ள பாதாளம் மகிழ்ச்சியால் பரபரக்கின்றது; உலகின் இறந்த தலைவர்கள் அனைவரும் உன்னை வரவேற்குமாறு அவர்களை எழுப்புகிறது. வேற்றினத்தாரின் அரசர்கள் அனைவரையும் அவர்தம் அரியணையை விட்டு எழச் செய்கிறது. "