Bible Language

Isaiah 17:12 (NASU) New American Standard Bible (Updated)

Versions

TOV   ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது.
IRVTA   ஐயோ, கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக மக்களின் கூட்டம், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற மக்கள் கூட்டங்களின் சத்தமும் உண்டாயிருக்கிறது.
ERVTA   ஏராளமான ஜனங்களை விசாரித்துக் கேள்! அவர்கள் உரத்து கடல் இரைச்சலைப் போன்று அலறிக்கொண்டிருக்கிறார்கள். சத்தத்தைக் கேள். இது கடலில் அலைகள் மோதிக்கொள்வதைப் போன்றிருக்கும்.
RCTA   இதோ, பல நாட்டு மக்களின் பேரிரைச்சல்: கடல் கொந்தளிப்பின் இரைச்சல் போல முழங்குகிறார்கள்; இதோ, மக்களினங்களின் கர்ச்சனை கேட்கின்றது; வெள்ளப் பெருக்கின் கர்ச்சனை போல கர்ச்சிக்கிறார்கள்!
ECTA   ஐயோ! மக்களினங்கள் பலவற்றின் ஆரவாரம் கேட்கிறது; கடல் கொந்தளிப்பதுபோல் அவர்கள் கொந்தளிக்கிறார்கள்; இதோ, மக்கள் கூட்டத்தின் கர்ச்சனைக்குரல் கேட்கிறது; வெள்ளப்பெருக்கின் இரைச்சலைப் போல் அவர்கள் முழங்குகிறார்கள்.